திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த ஶ்ரீ விநாயகா திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும்.

எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் ரூ. 500 மட்டும். பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா,ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான வரனை தேர்ந்தெடுக்க ரூ. 50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது.

மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு.

எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும்.


ஶ்ரீ விநாயகா திருமண தகவல் தொடர்பு மையம்
K.M. சிமிண்ட் ஒர்க்ஸ்

135, செக்கடி தெரு,

(யோகிராம் சூரத்குமார் பஜனாலயம் அருகில்)

அமுதலிங்கேஸ்வரர் ஆலய வடக்குகோபுர வாசல் எதிர்புறம்,

மதுரை ரோடு, அருப்புக்கோட்டை.

செல்: 8760687607, 9150267690, 7010546076.