நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும்
அன்புள்ள,
தங்களை திருமண தகவல் மையம் அன்புடன் வரவேற்கின்றது.
முதலில் எங்கள் நிறுவனத்தின் நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் கவனித்து படிக்கவும். எங்களது நிபந்தனைகள் அனைத்தையும் படித்த பின்னர், அதற்கு தாங்கள் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் தங்கள் தகவல்களை பதியவும்.
- பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் ஆனால் மட்டுமே எங்கள் நிறுவனத்தில் பதிய முடியும்
- தகவல்கள் அடிப்படையில் நீங்கள் ஒப்பந்தங்கள் மேற்கொண்டால், அது சட்டப்பூர்வமாக எங்களை கட்டுப்படுத்தாது
- மிக முக்கியமாக, எங்கள் தகவலின் அடிப்படையில் தாங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்வது திருமண விஷயத்திற்கு மட்டுமே
- தங்களுக்காக வழங்கப்பட்ட தகவல்களை, நீங்கள் வேறு ஒருவருக்காக பயன்படுத்தினால், அதை உறுதி செய்யும் பட்சத்தில் தங்கள் பதிவு எண்ணை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு
- தங்களுக்கு நிர்வாகத்தினால் வழங்கப்படும் பதிவு எண்ணையும், கடவுச்சொல்லையும் பாதுகாக்கும் பொறுப்பு உங்களுடையதே. தவறும் பட்சத்தில், உங்கள் பதிவு எண்ணைப் பயன்படுத்தி வேறு ஒருவர் தகவல்கள் எடுத்தாலும், தங்கள் முன்பணத்தை பயன்படுத்தினாலும் நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பாகாது
- உறுப்பினர்கள், தாங்கள் தரும் தகவல்களுக்கு தாங்களே முழுப் பொறுப்பாவீர்கள்
- உறுப்பினர்கள், மற்ற மணவீட்டார்களுக்கு "மனம் வருத்தப்படும் படியாகவோ, அவமானப்படுத்தும் படியாகவோ அல்லது செக்ஸ் சம்பந்த தகவல்கள்" அளிக்கும் பட்சத்தில் உங்கள் உறுப்பினர் அதிகாரம் முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்
- தங்களுக்கு நாங்கள் வழங்கும் தகவல்களை மற்ற திருமணத் தகவல் மையங்களுக்கு வழங்கக் கூடாது
- திருமண தகவல் மையத்தின் சட்ட திட்டங்களை மாற்றி அமைப்பதற்கும், புதிய நடைமுறை விதிகளை உண்டாக்கவும், நடைமுறையில் உள்ள விதிகளின்படி இல்லாதவர்களை முன் அறிவிப்பு எதுவும் இன்றி நீக்குவதற்கும் நிறுவனத்திற்கு முழு அதிகாரம் உண்டு
- பொதுவாக கம்ப்யூட்டர் இன்டர்நெட் தகவல்களை பயன்படுத்தும் பொழுது வைரஸ் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வர வாய்ப்பு உள்ளது. அதேபோல், திருமண தகவல் மையம் நெட்வொர்க்கை கம்ப்யூட்டரில் தாங்கள் கையாளும் பொழுது ஏதாவது வைரஸ் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பாகாது
- நிர்வாகத்தால் வழங்கப்படும் தகவல்களை மறுபிரதி எடுக்கவோ, விற்பதற்கோ, தாங்களாக திருத்தங்கள் செய்வதற்கும் அனுமதி கிடையாது
- நமது நிறுவன லோகோவையும், நெட்வொர்க் முகவரியையும் பயன்படுத்த யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை
- தங்கள் மேலான கருத்துக்களையும், புகார்களையும் எங்கள் @srivinayagamatrimony.com-க்கு உடனடியாக அனுப்புங்கள். உங்களது ஒவ்வொரு கருத்துக்களையும் உடனடியாக பரிசீலிக்கின்றோம்